உயர் சர்வதேச கற்கை நிறுவகத்திற்கு "Fastest Growing Educational Institute of the Year - Platinum Award" விருது



உயர் சர்வதேச கற்கை நிறுவகத்திற்கு சர்வதேச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Business World International Awards - USA 2025 கான விருது வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (5) கொழும்பு Mount Lavinia Hotel ல் நடைபெற்றது.

இதன்போது Educational Institute /Services துறையில் சிறந்து விளங்கும் நிறுவனம் என்ற வகையில் உயர் சர்வதேச கற்கை நிறுவகத்திற்கு "Fastest Growing Educational Institute of the Year - Platinum Award" வழங்கப்பட்டது.

இவ் விருதினை கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் திரு. தம்பிப்பிள்ளை துஷ்யந்தன் மற்றும் கற்கை நிறுவகத்தின் பணிக்குழாம் இணைந்து பெற்று கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.