நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு நடைபெறும் நாளான இன்று (26) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் இன்று தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு, அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது.