மட்டக்களப்பின் அதிகஷ்ட பிரதேசமான பனையறுப்பான் கிராமத்திலிருந்து பொறியியல் பீடத்திற்கு தெரிவான நே . தசாகரன்


நேற்று வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு மாவட்டத்தின் அதிகஷ்ட பிரதேசமான பனையறுப்பான் பிரதேசத்தில் இருந்து பொறியியல் பீடத்திற்கு தெரிவாகியிருக்கிறார் நேசதுரை தசாகரன் என்ற மாணவன் பல கஷ்ங்களை எதிர்கொண்டு அடிப்படை வசதிகளற்ற பனையறுப்பான் கிராமத்திலிருந்து வந்து அரசடித்தீவில் தங்கியிருந்து அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று , சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பின் zoom வகுப்பில் முழுமையாக இணைந்து இந்த நிலையை அவர் அடைந்திருக்கிறார். 


குறித்த மாணவன் கா.பொ.த சாதாரண தரம் வரை  பன்சேனை பாரி வித்தியாலயத்தில் தொடர்ந்திருந்த நிலையில் சிறந்த பெறுபேற்றுடன் வித்தியாலய அதிபர் பவளசிங்கம் அவர்களினதும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய அதிகாரிகளினதும் வழிகாட்டலின் கீழ் உயர்தர கல்வியை கணித பிரிவில்   அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தொடர்ந்துருந்தார் அந்த வகையில் A 2B பெறுபேற்றை பெற்று மாவட்ட ரீதியில் 59 வது நிலையினை பெற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவாகியுள்ள குறித்த மாணவன் தான் பிறந்த பனையறுப்பான் கிராமத்திற்கும் இடை நிலைக் கல்வியை கற்ற பாடசாலைக்கும் பெருமையினை தேடிக்கொடுத்திருக்கிறார்.

நகர் புறப் பாடசாலையில் கல்வி கற்போர் மாத்திரமே கணித விஞ்ஞான துறைகளில் சாதிக்கலாம் என்ற விம்பத்தை உடைத்து கஷ்ட பிரதேச மாணவர்கள் கஷ்ட பிரதேச பாடசாலைகளிலே கற்று சாதித்து என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறார்கள்

இலங்கையில் அதிகஷ்ட கஷ்ட பிரதேச பாடசாலைகளை மாத்திரம் கொண்ட மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பாடசாலைகளிலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் பொறியியல் பீடம் மருத்துவ பீடத்திற்கு மாணவர்கள் தெரிவாகி வருகின்றனர்

அந்த வகையில் இம்முறையும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/மமே/ முதலைக்குடா மகா வித்தியாலயத்திலிருந்து பொறியியல் பீடத்திற்கு 3 பேரும் மருத்துவ பீடத்திற்கு ஒருவரும் தெரிவானதுடன் மட்/மமே/ அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்திலிருந்து பொறியியல் பீடத்திற்கு ஒருவர் தெரிவானதுடன் மட்/மமே/ அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்திலிருந்து பொறியியல் பீடத்திற்கு ஒருவரும் தெரிவாகியுள்ளனர். அத்துடன் வர்த்தக கலைப் பிரிவிலும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மாணவர்கள் இம்முறையும் சாதித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.