இந்தச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியான ரிதிதென்னை புகையிர நிலையத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற புகையிரத வண்டி ரிதிதென்னை நிலையத்தில் நிறுத்தி விட்டு மீண்டும் செல்லும் போது வயோதிபர் ஒருவர் ஏற முற்பட்ட போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில், காயமடைந்த 60 வயதுடைய நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வயோதிபரின் இடது கால் சத்திர சிச்சையின் பின்னர் அகற்றப்பட்டுள்ளது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.