நாளை முதல் கடவுச்சீட்டு விநியோகத்தில் மாற்றம் !


கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் நாளை(15) முதல் ஏப்ரல் 17 வரை வரையறுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்நாட்களில் டோக்கன்கள் பகிர்வு மதியம் 12 மணி வரை மட்டுமே இடம்பெறும் என என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அறிவித்துள்ளது.

ஒரு நாள் சேவைக்காக செயல்பட்டு வந்த 24 மணி நேர சேவை அந்த நாட்களில் இயங்காது என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.