களனி கங்கையிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு !


பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருப்புப் பாலத்திற்கு அருகில் களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பேலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, நேற்று (26) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்த நபர் சுமார் 50 வயதுடைய 5 அடி 6 அங்குலம் உயரம் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது தலைமுடி ஒரு அங்குலம் வரை வளர்ந்திருந்ததாகவும், நீல நிற T-Shirt (டி-சர்ட்) அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் சற்று சிதைவடைந்த நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.