ஜனாதிபதி தலைமையில் இன்று அவசர சர்வகட்சி கூட்டம்



அமெரிக்காவின் வரி அறிவிப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி கூட்டமொன்று இன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வரி அறிவிப்பு தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தெளிவுப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அமெரிக்காவின் வரி தொடர்பில் ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் 12 கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்ததாக சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.