வவுணதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைந்துள்ள பிரதான நீர் தொட்டியினுடைய சுத்தப்படுத்துதல் நடவடிக்கை காரணமாக 26.04.2025 (சனிக்கிழமை) அன்று காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.
இதனால் மண்முனை வடக்கு, காத்தான்குடி, மண்முனைப்பற்று, ஏறாவூர், ஏறாவூர் பற்று, கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று (வாழைச்சேனை), கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு, வவுணதீவு , பட்டிப்பளை (கொக்கட்டிச்சோலை ) பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட நீர்ப்பாவனையாளர்களிற்கு நீர் வழங்குதல் தடைப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
ஆகவே வழங்கப்படும் நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து தங்கள் பாவனைக்கு பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் கேட்டுக்கொள்கின்றார்.