
(M.N.Theepan)
நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையிலான திருக்கோவில் பிரதேச தமிழரசுக்கட்சி வேட்பாளர்களினை அறிவுறுத்தும் கூட்டமானது 06.04.2025 அன்று தம்பட்டை முதலாம் வட்டார வேட்பாளர் எஸ்.வேலவராஜன் அவர்களது இல்லத்தில் இடம்பெற்றது
இங்கு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் திருக்கோவில் பிரதேசசபைக்கான அனைத்து வட்டாரங்களிலும் தமிழரசுக்கட்சியினது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதொன்று எனவும் இவ்வெற்றியினை அமோக வெற்றியாக்குவதற்கு அனைத்து வேட்பாளர்களும் அர்ப்பணிப்புடன் வேகமாக களப்பணிகளினை மேற்கெள்ளவேண்டும் எனவும்
தமிழரசுக்கட்சியானது தேர்தலுக்கு தேர்தல் பேரினவாத கட்சிகளது நிகழ்ச்சி நிரலுக்காக முகமூடிகளை மாற்றி மாற்றி சுயேட்சைகளாகவும் கட்சிகளாகவும் வலம்வரும் முகவர்கள் கட்சிகளல்ல நாம் தமிழரசுக்கட்சியானது தமிழ்தேசிய கொள்கையுடன் தமிழ்மக்களுக்கான விடிவிற்காக 75 வருடகாலமாக போராடிக்கொண்டிருக்கும் கட்சி எத்தனை சதிகாரர்கள் சதிகள் மேற்கொள்ளப்பட்டாலும் இன்றுவரை எமது மக்களுக்காக குரல்கொடுத்தவர்களும் குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர்களும் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளே இதற்கான ஆனணயினையே எமது மக்கள் தமிழரசுக்கட்சிக்கு வழங்கியிருக்கிறார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் தமிழனின் ஆதிக்கத்திற்குட்பட்ட அனைத்து வட்டாரங்களையும் தமிழனின் இருப்பினை அடையாளப்படுத்த தமிழ் மக்கள் தமிழ் தேசியத்திற்காவும் தமிழரசுக் கட்சிக்குமே வாக்களிக்கவேண்டும் என கருத்து தெரிவித்ததுடன்
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வட்டாரரீதியிலான வேட்பாளர்களுக்கான பிரச்சாரங்களினை மேற்கொள்வதற்கான உத்திகளினையும் வழிகாட்டுதல்களினையும் வழங்கியிருந்தார் இக்கூட்டத்தில் தொழிலதிபர் க.இந்துனோஷ் தமிழரசுக்கட்சி மத்திய குழு உறுப்பினர் இரா.கண்ணதாசன் , முன்னாள் தவிசாளர் சோ.பாக்கியராஜா மற்றும் திருக்கோவில் பிரதேச சபைக்கான அனைத்து வட்டார முதன்மை, விகிதாசார வேட்பாளர்கள் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களினையும் முன்வைத்தமை குறிப்பிடதக்கது.