எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ : நால்வர் உயிரிழப்பு, நால்வர் காயம் !


குருணாகல், வெஹெகர சந்திப்பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவலில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த தீ பரவலில் சிக்கி மேலும் 4 பேர் காயமடைந்துள்ள நிலையில், சிகிச்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் திங்கட்கிழமை (7) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் குருணாகல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.