
ஹைலன்ட் (Highland ) பால்மாவின் விலை குறைக்கப்பட்டதால் ஹைலன்ட் யோகட் மற்றும் தூய பசும்பாலின் விலைகளை 10 ரூபாவால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மில்கோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, (Highland ) யோகட்டின் புதிய விலை 70 ரூபா என மில்கோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் சம்பத் குணரத்ன தெரிவித்தார்.