மாத்தளை - நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உஸ்ஸெத்தாவ பகுதியில் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வெள்ளிக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தம்புள்ளை முகாமிற்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அளுத்கம, மனன்வத்தப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்து, 33 லீற்றர் சட்டவிரோத மதுபானம், செப்பு தகடு மற்றும் இரும்பு தகடு என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாவுல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.