
மஹரகம - பமுனுவ பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹரகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பெண்ணிடமிருந்து 2 ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட பெண் கொஸ்கம பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.