ஹொரணையில் வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் வயோதிபர் கைது !



சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் வயோதிபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வெள்ளிக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் ஹொரணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதுவிட்ட சந்திக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 73 வயதுடைய கோனபால பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிபர் ஆவார்.

சந்தேக நபரிடம் இருந்து 240 வெளிநாட்டு சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து, கைதான சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹொரணை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.