அடையாளம் தெரியாத இரு சடலங்கள் மீட்பு !



அடையாளம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்பு நெளுக்குளம் மற்றும் மொரட்டுவை பொலிஸ் பிரிவுகளில் அடையாளம் காணப்படாத இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் (01) இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பனை - புளியங்குளம் அருகிலுள்ள பாழடைந்த காணி ஒன்றில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சடலம் முல்லைத்தீவு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், மொரட்டுவை பொலிஸ் பிரிவின் கொரலவெல்ல பொல்வத்த பகுதியில் உள்ள கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.