கெஸ்பேவ பகுதியில் உள்ள வீட்டொன்றில் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கெஸ்பேவ, மடபாத்த, மாகந்தன, பட்டுவந்தர பகுதிகளில் உள்ள வீட்டினுள் நேற்று (28) இரவு குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
உடல் மிகவும் சிதைந்து அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்ததாகவும், மரணம் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பெண்ணாக இருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவ இடத்திலுள்ள நீதவான் விசாரணை இன்று (29) இடம்பெறவுள்ள நிலையில், கெஸ்பேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.