சிறி தலதா வழிபாட்டிற்காக வரும் பக்தர்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக, சுகாதார மேம்பாட்டு பணியகம் வழிகாட்டு நெறிமுறைகள் சிலவற்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமது சுகாதாரப் பாதுகாப்பிற்காக இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு பணியகம், வழிபாட்டில் பங்கேற்கும் பக்தர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
1. நீரிழப்பைத் தவிர்க்க அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்.
2. வீட்டிலிருந்து கொண்டு வந்த சமைத்த உணவை விரைவாக உண்ணவும். உணவு கெட்டுப்போனதாகத் தோன்றினால் உண்ணுவதைத் தவிர்க்கவும்.
3. நீங்கள் தினசரி மருந்து (ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை) உட்கொள்பவராக இருந்தால், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மருந்து எடுக்கவும். மேலதிக நாட்களுக்கு தேவையான மருந்துகளை வைத்திருக்கவும்.
4. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், நோயறிதல் அறிக்கை அல்லது கிளினிக் அட்டையின் நகலை வைத்திருக்கவும்.
5. உங்கள் குழந்தையின் உடை அல்லது பையில் உங்கள் தொலைபேசி இலக்கத்தை எழுதி வைக்கவும்.
6. வரிசையில் இருக்கும்போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவசரப்பட வேண்டாம். ஒருவர் அவசரப்பட்டால், பலர் குழப்பமடைந்து நெரிசல் ஏற்படலாம். விபத்துகளைத் தவிர்ப்போம்.
7. அத்தியாவசியப் பொருட்களை மட்டும் எடுத்துச் செல்லவும். குப்பைகளைக் குறைக்க உதவவும். முடிந்தவரை குப்பைகளை அதற்குரிய குப்பைத் தொட்டிகளில் போடவும். உங்கள் பொறுப்பை நிறைவேற்றவும்.
8. சுகாதாரப் பிரச்சினை ஏற்பட்டால், வரிசையில் உள்ள அதிகாரிகள் அல்லது அமைக்கப்பட்டுள்ள சுகாதார மையங்களில் உடனடியாக உதவி பெறவும்.
9. ரயிலில் பயணிக்கும்போது கதவுகள், ஜன்னல்கள் அல்லது வண்டியில் தொங்குவதைத் தவிர்க்கவும். ரயில் பயணத்திலும், புனித ஸ்தலங்களில் நடக்கும்போதும் விபத்துகளைத் தவிர்ப்போம்.
10. உங்கள் வாகனத்தை நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பிற்கு உட்பட்டு கவனமாக ஓட்டவும். பொறுப்புடன் வாகனம் செலுத்தி வீதி விபத்துகளைத் தவிர்க்கவும்.
11. தனிப்பட்ட சுகாதாரத்திற்காக சிறிய சவர்க்காரத் துண்டு அல்லது கை சுத்திகரிப்பு திரவம் (hand sanitizer) எடுத்துச் செல்லவும்.
120 கொசு கடியிலிருந்து பாதுகாக்க, கொசு விரட்டிகளை பயன்படுத்தவும்.