ஆசிரியரால் தாக்கப்பட்டு காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதி !


காலி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மாணவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளது.

ஏழாம் வகுப்பில் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

இந்த மாணவன் சுகாதாரமும் உடற்கல்வியும் கற்கையின் பாடப்புத்தகத்தை பாடசாலைக்கு நேற்றைய தினம் கொண்டு செல்ல மறந்துள்ளார்.

இதனால் அந்த பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் இந்த மாணவனை பலமாக தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த மாணவன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.