சங்காரவேல் பவுண்டேசனின் முழு நிதி பங்களிப்பினால் வன்னி கிழக்கு மாகாணம் மற்றும் வன்னி பிராந்தியத்தின் கஷ்ட, அதிகஷ்ட பிரதேச 19 பாடசாலைகளின் மாணவர்களிற்கான மூன்று நாள் உயர்தர விஞ்ஞான பாட செயன்முறை வகுப்புகள் யாழ் இந்துக்கல்லூரியில் ஏப்ரல் மாதம் 16,17,18ம் திகதிகளில் ஆசிரியர்கள் மற்றும் யாழ் இந்து மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி மாணவர்களுக்கு யாழ் இந்து கல்லூரி ஆசிரியர்களால் தொடர்ச்சியான நிகழ்நிலை கற்பித்தல் ( ZOOM CLASS ) செயற்பாடு சங்காரவேல் பவுண்டேசனின் முழு அனுசரணை மற்றும் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படுகின்றது
2024 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக் கல்வி திட்டத்தின் முக்கிய நோக்கமாக அண்மையில் க.பொ.த உயர்தர கணித விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்ட, ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் ஆய்வு கூட வசதிகளற்ற பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களையும் , பாடசாலை கல்விக்கு மேலதிகமாக பிரத்தியோக வகுப்புகளுக்கு நகர் பகுதிகளுக்கு செல்வதற்கு வசதிகளற்ற நிலையில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மாணவர்களை இணைத்து அவர்களின் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் அடைவு மட்டத்தை உயர்த்தி, பாடசாலைக் கல்வியின் அடுத்த கட்டமான பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு வழியமைப்பதாகும்.
செயன்முறை வகுப்புகளுக்கு இணைந்துகொண்ட பாடசாலை மாணவர்கள்
- முல்லைத்தீவு ரோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயம்
- முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம்
- முல்லைத்தீவு பாலிநகர் மகா வித்தியாலயம்
- முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலயம்
- இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயம்
- பதுளை சர்னியா தமிழ் மகா வித்தியாலயம்
- திருகோணமலை இந்து கல்லூரி
- திருகோணமலை மூதூர் பாத்திமா கல்லூரி
- திருகோணமலை அல்ஹிலால் மத்திய கல்லூரி
- திருகோணமலை சேனையூர் மகா வித்தியாலயம்
- வவுனியா நெல்லுக்குளம் கலைமகள் வித்தியாலயம்
- அம்பாறை தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம்
- அம்பாறை விநாயகபுரம் மகா வித்தியாலயம்
- அம்பாறை அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயம்
- மட்டக்களப்பு செட்டிபாளையம் மகா வித்தியாலயம்
- மட்டக்களப்பு மகாஜன கல்லூரி
- மட்டக்களப்பு முதலைக்குடா மகா வித்தியாலயம்
- மட்டக்களப்பு கன்னங்குடா மகா வித்தியாலயம்
- மட்டக்களப்பு நாவற்குடா மகா வித்தியாலயம்