செவ்வாய்கிழமை (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள வரி அதிகரிப்பானது உலகின் பல நாடுகளிலும் பெரும் பிரச்சினையாகியிருக்கிறது. ஆனால் எமது நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதுள்ள கோபத்தால் ட்ரம்ப் இவ்வாறு வரி விதித்துள்ளதைப் போன்று காண்பிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் இது அவ்வாறானதல்ல.
எவ்வாறிருப்பினும் இந்த பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அமெரிக்காவின் உயர் அதிகாரிகளுடன் இது தொடர்பில் இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகள் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கின்றனர். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமின்றி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு ஏற்றுமதி தொழிற்துறையுடன் தொடர்புடையவர்களை அடிக்கடி சந்தித்து நிலைவரம் தொடர்பில் மதிப்பாய்வு செய்து அறிக்கையைத் தயாரித்து வருகின்றனர்.
அரசாங்கம் என்ற ரீதியில் அமெரிக்காவிடம் எழுத்து மூல கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த பிரச்சினைக்கு தீர்வொன்றை எட்ட முடியும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.