வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட நாள் இன்று !


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட நாளாக இன்று (27) அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளையும் இன்று வாக்காளர்களுக்கு விநியோகிக்க தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கிடையில், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 29 ஆம் திகதியுடன் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, அந்த திகதிக்குள் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பெறாத வாக்காளர்கள், தங்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அமைவான தபால் நிலையத்திற்குச் சென்று, தங்கள் அடையாளத்தை உறுதி செய்து, பின்னர் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.