முச்சக்கர வண்டி மோதியதால் முதியவர் பலி !



முச்சக்கரவண்டி மோதியதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் சிகிச்சை சனிக்கிழமை (26) பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 60 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (24) சைக்கிளில் கூலிவேலைக்கு சென்றுகொண்டிருந்தபோது யாழ். போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் முச்சக்கவண்டி மோதியதால் அவர் உடல் உபாதைக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்து, அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.