
இந்தியப் பிரதமர் கச்சத்தீவை மீட்டு, இலங்கைத் தமிழர்களுக்குத் தனி நாடு அமைந்திட ஆவன செய்வார் என மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ராமேஸ்வரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள காணொளியிலேயே இலங்கைத் தமிழர்களுக்குத் தனிநாடு அமைந்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு தான் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் பிரதமர் நிறைவேற்றியுள்ளதாக மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளமை, மீனவர்களின் படகுகள் மீட்கப்பட்டமை, உள்ளிட்டவை தான் பிரதமரிடம் முன்வைத்த கோரிக்கைகளாலேயே சாத்தியம் எனத் தேசிக சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கைத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கவும் இந்தியப் பிரதமர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார் என அவர் சுட்டிக்காட்டினார்.
கச்சத்தீவைத் தாரைவார்த்தவர்களே இன்று அதை மீட்க வேண்டும் எனப் பேசி வருவதாகக் குறிப்பிட்ட மதுரை ஆதீனம் சுவாமிகள்,
இந்தியப் பிரதமர் கச்சத்தீவை மீட்டு, இலங்கைத் தமிழர்களுக்குத் தனி நாடு அமைந்திட ஆவண செய்வார் என மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் தெரிவித்துள்ளார்.