மட்டக்களப்பில் 6 பேர் கொண்ட குழு வீடு ஒன்றில் உள்நுழைந்து தாக்குதல்


மட்டக்களப்பு - வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தில் 3 மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட குழு வீடு ஒன்றில் உள்நுழைந்து தாக்குதல் நடாத்தி அட்டகாசம் செய்துள்ளனர்.

இச் சம்பவத்திலபெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை மடக்கி பிடித்து கட்டி வைத்ததுடன் தாக்குதலை மேற்கொண்டவர்கள் மோட்டர் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி ஓடிய சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (15) இரவு 11.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

.