திருகோணமலையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது !




திருகோணமலை - சீனக்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் வெள்ளிக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் திருகோணமலை முகாமிற்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஆவார். சந்தேக நபரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து, கைதானவர் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.