ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மே 6 ஆம் திகதிவரை வியட்நாமில் தங்கியிருப்பார்.
குறித்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் பரஸ்பர நலன்களைக் கொண்ட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் அமைச்சர் ஜயதிஸ்ஸ மேலும் கூறியுள்ளார்.