ஹிக்கடுவ, கருவலகந்த பகுதியில் நேற்று (03) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 51 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குமரகந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் திருமணமான தம்பதியினரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று இரவு 7.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு துப்பாக்கிதாரியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதனால், காயமடைந்த ஆண் மற்றும் பெண் இருவரும் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
இறந்தவர் சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், அவரது நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.