களுத்துறை அளுத்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து 5,081,000 ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் தாயும் இரண்டு மகன்களும் உட்பட நால்வர் அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் கடந்த வியாழக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.
அளுத்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேருவளை பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 51 வயதுடைய தாயும் 22 மற்றும் 11 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் அளுத்கம பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமியுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.