இலங்கையின் சூழல் பாதுகாப்பினை சமரசம் செய்யும் விதத்தில் மன்னாரில் காற்றாலை மின்திட்டம் முன்னெடுக்கப்படலாம் - சூழல் ஆர்வலர்கள்



மன்னாரில் பாரிய அளவிலான காற்றாலை மின்திட்டத்தினால் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்புகள் மீண்டும் கரிசனை வெளியிட்டுள்ளன.

வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம்,சுற்றுச்சூழல் நீதிமையம்,சுற்றுசூழல் அறக்கட்டளை லிமிடெட் உட்பட் சூழல் பாதுகாப்பு அமைப்புகளே மன்னாரில் பாரிய அளவிலான காற்றாலை மின்திட்டத்தினால் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்புகள் மீண்டும் கரிசனை வெளியிட்டுள்ளன.

தனித்துவமான மற்றும் உணர்திறன் வாய்ந்த சுற்றுசூழல் அமைப்பை கொண்ட மன்னார் தீவு தொழில்துறை திட்டங்களால் கடுமையான பாதுகாப்பை எதிர்கொள்கின்றது என தெரிவித்து வரும் சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் தொழில்துறை திட்டங்களால் மன்னார் தீவின் பல்லுயிரியல் பாதிக்கப்படலாம்,உள்ளுர் வனவிலங்குகளிற்கு ஆபத்து ஏற்படும் என எச்சரித்துவருகின்றனர்.

மன்னாரில் அதானி குழுமம் முன்னெடுக்கவிருந்த காற்றாலை மின் திட்டத்தினால் சூழலிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கரிசனைகள் வெளியாகியிருந்தன, இந்த கரிசனைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதா என்பதே பிரச்சினையின் மையமாக உள்ளது.

கட்டணங்கள் குறித்த விடயங்களும், பொருளாதார நலன்களும் முக்கியம் பெற்றன,சூழல் பாதிப்புகள் குறித்த விடயங்கள் புறக்கணிக்கப்பட்டன என சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன் காரணமாக இலங்கையின் சூழல் பாதுகாப்பினை சமரசம் செய்யும் விதத்திலான திட்டமொன்று முன்னெடுக்கப்படும் ஆபத்துள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னாரின் பலவீனமான சுற்றுசூழல் அமைப்புடன்,காற்றாலை மின்சக்தி திட்டம் இணைந்து இயங்க முடியுமா என சுற்றுச்சூழல் நீதிமையத்தின் சூழல் விஞ்ஞானி ஹேமந்த விதானகே கேள்வி எழுப்புகின்றார்.

மீள்சக்தி திட்;டத்தினை பல்லுயிரியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் முன்னெடுக்க கூடாது என அவர் தெரிவிக்கின்றார்.

அபிவிருத்தி குறித்த விவாதங்களின் போது சூழல் ஆர்வலர்கள் அபிவிருத்தி திட்டங்களிற்கு தடையாக உள்ளனர் என தவறாக சித்தரிக்கப்படுகின்றனர் என சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.