என்னை எத்தனை தடவையும் கைதுசெய்யுங்கள் , எனது மனைவியை கைதுசெய்தால் என்ன நடக்கும் என்று தெரியாது - லொகான் ரத்வத்தை !



ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் லொகான் ரத்வத்தை சமீபத்தில் அரசியல்வாதிகள் அவர்களது மனைவிமார் கைதுசெய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தன்னை மாத்திரமல்ல தனது மனைவியையும் கைதுசெய்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

இது வெட்கக்கேடான விடயம் நீங்கள் என்னை மாத்திரமல்ல, எனது மனைவியையும் கைதுசெய்தீர்கள்,தற்போது மற்றுமொரு முன்னாள் முதலமைச்சரும் அவரது மனைவியும் சிறையில் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜேவிபி கால குற்றங்களிற்காக ஜனாதிபதியையும் அவரது சகாக்களையும் தூக்கிலிடவேண்டும் என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் நாட்டிற்கு நல்லது செய்தால் நாங்கள் உங்களிற்கு ஆதரவளிப்போம்,இல்லாவிட்டால் நாங்கள் மாற்று நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியிருக்கும்,நீங்கள் எத்தனைதரவேண்டும் என்றாலும் என்னை சிறையில் அடைக்கலாம்,நீங்கள் எனது மனைவியை கைதுசெய்தால் என்னசெய்யவேண்டும் என எனக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.