இரண்டு மின்சார டெட்டனேட்டர்களுடன் ஒருவர் கைது


2 மின்சார டெட்டனேட்டர்கள் மற்றும் 81 கிராம் கஞ்சா வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிங்வத்த பொலிஸ் பிரிவின் நெப்போலியன் தோட்ட பகுதியில், பிங்வத்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் வாத்துவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பிங்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.