அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், எமது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் புதுப்பிக்க வேண்டிய தேவையுள்ள நேரத்தில் இப் புத்தாண்டு மலர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எமது கலாசாரம் மற்றும் பெறுமானங்களில் வேரூன்றியிருக்கும், நேர்மறையான மாற்றத்தை அடைந்துகொள்வதற்கு, இலக்குகளின் அடிப்படையில் நாம் ஒற்றுமையுடன் முன்னேற வேண்டும் என்பதை இந்த பாரம்பரியப் பண்டிகை எமக்கு நினைவூட்டுகிறது.
அண்மைய வரலாற்றில், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பலருக்குப் புத்தாண்டு கொண்டாட்டம் பற்றி நினைத்தும் பார்க்க முடியாதளவு கடினமாக இருந்ததை நாம் அறிவோம்.
மலர்ந்திருக்கும் புத்தாண்டில் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பிக்கும் இந்த தருணத்தில், அனைத்துப் பிரஜைகளும் தங்கள் சமூகங்களில் கௌரவம், அமைதி மற்றும் பரிவுணர்வுடன் செயற்பட வேண்டும் எனப் பிரதமர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.