குறித்த பல்கலைக்கழகத்தில் கடந்த காலத்தில் மாணவர்களுக்கு வழங்கிய மாஹாபொல புலமைப்பரிசில், விளையாட்டுத்துறை, ஆய்வு மகாநாடுகள், மற்றும் அபிவிருத்திகளில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் விரிவுரையாளர்கள் ஜனாதிபதிக்கு முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த முறைப்பாட்டுக்கமைய ஜனாதிபதி செயலகம் உயர்கல்வி அமைச்சுக்கு அறிவுறுத்தல் வழங்கியதையடுத்து இந்த நிதி மோசடி தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு உயர்கல்வி அமைச்சு கோரியுள்ளதையடுத்து இது தொடர்பாக பல்கலைக்கழக மானிய ஆணைக்கழுவினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.