பளைவீமன்காமம், தெல்லிப்பளையைச் சேர்ந்த கவிந்தன் சாமினி (வயது 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புது வருடத்தன்று காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த சனிக் கிழமை மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலை மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று திங்கள் கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்