
மட்டக்களப்பு அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் கணிதப்பிரிவில் கல்விகற்று எமது பாடசாலையில் இருந்து முதலாவது பொறியியலாளராக செல்வி. இராசரத்தினம் தமிழ்ரூபிகா அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது எமது பாடசாலைக்கும், எமது சமூகத்திற்கும் மிகப் பெரும் பெருமை தரும் நிகழ்வாகும். கல்வி பயணத்தில் கடந்து வந்த எல்லா தடைகளையும் தாண்டி, ஒவ்வொரு கட்டத்தையும் சாதனையாய் மாற்றியுள்ள இவர், இளம் தலைமுறைக்கு ஒரு மிகப்பெரிய முதற்கொடி போல் விளங்குகிறார். மேலும் உயர்ந்த நிலைகளை எட்ட வாழ்த்துகள்!