போலி கிரேக்க வதிவிட விசாக்களுடன் கிரீஸூக்கு செல்ல முயன்றதற்காக மூன்று பங்களாதேஷ் பிரஜைகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டனர்.
மார்ச் 30 ஆம் திகதி மாலை 5:25 மணிக்கு புறப்படவிருந்த கல்ஃப் ஏர் விமானம் GF-145 இல் பஹ்ரைனுக்கு ஏற முயன்றபோது 22, 23 மற்றும் 25 வயதுடைய பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.
கிரீஸ் குடியுரிமை விசாக்கள் குறித்து அதிகாரிகள் சந்தேகம் அடைந்து, மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவுத் திணைக்கள எல்லை கண்காணிப்புப் பிரிவிடம் ஒப்படைத்தனர்.
தொழில்நுட்ப பரிசோதனையில் கிரீஸ் விசாக்கள் உயர் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி போலியாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் BIA குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.