இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாடளாவிய ரீதியில் வீட்டுக்கூரையில் பொருத்தப்பட்டுள்ள சூரியசக்தி கட்டமைப்பின் மின் உற்பத்தியாளர்கள் தங்கள் சூரிய மின் அமைப்புகளை தாமாக முன்வந்து நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நீண்ட விடுமுறை காலம் மற்றும் அதிக வெப்ப நிலை காரணமாக, தேசிய மின்சார தேவை மிகக் குறைந்த அளவிற்கு சரிந்துள்ளது, அதே நேரத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பங்களிப்பு தேசிய மின் கட்டமைப்பில் அசாதாரண அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இதன் விளைவாக, மின் கட்டமைப்பில் ஸ்திரத்தமை ஏற்பட்டுள்ளது. இது திடீர் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது. இதனால் ஏற்படும் சிறிய ஏற்ற இறக்கம் கூட நாடளாவிய ரீதியில் அல்லது பகுதியவில் மின் தடையை ஏற்படுத்தக்கூடும்.
இதனால் தேசிய மின் கட்டமைப்பின் நிலைத்தன்மை மற்றும் ஸ்திரத்தனமையை பேண உங்கள் ஒத்துழைப்பை இலங்கை மின்சார சபை எதிர்பார்த்துள்ளது என மேலும் குறிப்பிட்டுள்ளது.