
சீதாவக்கை கங்கையில் மூழ்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளது.
பெபிலியாவல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இளைஞன் சீதாவக்கை கங்கையில் நேற்று மாலை நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.