துப்பாக்கிச் சூடு . சந்தேகநபர் ஹெரோயினுடன் கைது!


அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 27 ஆம் திகதி கொஸ்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உரகஸ்மன்ஹந்திய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 06 கிராம் 826 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், கடந்த 17 ஆம் திகதி அஹுங்கல்ல பொலிஸ் பிரிவில் ஒருவரை சுட்டுக் கொலை செய்ய முயன்ற துப்பாக்கிதாரி என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.