# # # # # # # # # # # # # # # #

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் !



மினுவாங்கொடை பிரதேசத்தில் இன்று (01) மதியம் இடம்பெற்ற பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள், வெல்ஹேன பொலிஸ் வீதித் தடையில் மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்துமாறு ஆணையிட்ட போதும், மோட்டார் சைக்கிள் நிற்காமல் சென்றுள்ளது.

பின்னர், இரண்டு அதிகாரிகள் அந்த மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்று நிறுத்தியுள்ளனர்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் இருந்த இரண்டு இளைஞர்கள், ஒரு அதிகாரியிடம் இருந்த கடமை துப்பாக்கியை பறிக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பொலிஸ் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஒரு இளைஞன் காயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர், மினுவாங்கொடை ராஜசிங்ஹபுர பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய லஹிரு திலந்த என்பவராவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ஹுக்கல்பொட, உனபந்துரவத்த பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய தரிந்து ஹேஷான் என்பவராவார்.

சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன