கட்டுநாயக்க, ஹினடியன பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை (26) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கட்டுநாயக்க, ஹினடியன பிரதேசத்திற்கு இன்று காலை 05.35 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் வீடொன்றில் இருந்த நபரொருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
இதனையடுத்து, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
29 வயதுடைய இளைஞனே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
இவர் பணம் வட்டிக்கு கொடுத்தல் மற்றும் பல வர்த்தக நிலையங்களை நடத்தி வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிதாரிகள் இருவரும் ரி - 56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.