சிறுமியொருவரை தனது மனைவி என அழைத்துச் சென்று பா லி ய ல் து ஷ் பி ர யோ க ம் செய்த இளைஞன் கைது !


சிறுமியொருவரை தனது மனைவி என அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கித்துல்ஹிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான இளைஞன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிறுமியுடன் காதல் உறவை பேணி வந்ததாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இளைஞன் சிறுமியின் வீட்டுக்கு சென்று அவரை இரகசியமாக தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து, கித்துல்ஹிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் சிறுமியொருவர் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் பொலிஸார், இளைஞரையும் சிறுமியையும் கைது செய்துள்ளனர்.

இளைஞன் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனடிப்படையில் சந்தேகநபரான இளைஞன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை மடாடுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.