ஜா - எல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் கணேமுல்ல மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 48 முதல் 51 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு கஜமுத்துக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இந்த கஜமுத்துக்களை 56 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய தயாராகவிருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா - எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.