கிரிபாவ பொலிஸ் பிரிவில் வீடொன்றிற்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் மாத்தறை பிரதேசத்தில் வைத்து நேற்று (03) கைது செய்யப்பட்டதாக கிரிபாவ பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் கடந்த 2ஆம் திகதி வீடொன்றுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி 157,000 ரூபா பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கிரிபாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய, கல்கமுவ மற்றும் மாத்தறை பிரதேசங்களில் வசித்து வரும் 32 மற்றும் 37 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
கொள்ளையடித்துச் செல்லப்பட்ட 187,200 ரூபா பணம், தங்க நகை மற்றும் இரண்டு கையடக்க தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிரிபாவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.