க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகும்


2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்று சனிக்கிழமை (26) மாலை வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு 333,185 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில் அவர்களில் 253,390 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களும் 79,795 பேர் தனியார் விண்ணப்பதாரர்களும் ஆவர்.

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.