வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் கட்டுநாயக்கவில் பெண் கைது !


சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ள வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் வெள்ளிக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், பொல்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் ஆவார்.

இந்த பெண் துபாயில் இருந்து இன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான பெண்ணின் பயணப்பொதியிலிருந்து 10,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 50 சிகரட்டு கார்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.