அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போது வேக வரம்புகள் குறித்து சாரதிகள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்குமாறு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பணிப்பாளர் கேட்டுக்கொள்கிறார்.
புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதன் விளைவாக விபத்துக்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி செல்ஃபி எடுப்பது அல்லது அரட்டை அடிப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதை சாரதிகள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் உள்ள விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.