இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பராட்டே சட்டம் (Parate Law) இன்று (01) முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நபர் ஒருவர் வங்கியில் அடகு வைத்த சொத்தை மீட்கவில்லை என்றால், அந்த சொத்துகளை பகிரங்க ஏலத்தில் விற்று, அதன் மூலம் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டி தொகையை மீட்டெடுக்கும் வகையில் இந்த பராட்டே சட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த சட்டம் பொருளாதார நெருக்கடியின் போது (2022-2023) தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது