80 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது !


கொட்டிகாவத்தை, நாகஹமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் சுமார் 80 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 13 கிலோ 372 கிராம் ஹெராயின் மற்றும் 3 கிலோ 580 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 27 வயதானவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டிகாவத்தை நாகஹமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்று போதைப்பொருள் விநியோக நிலையமாக இயங்கி வருவதாக மாலபே பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, இந்த சோதனை நடத்தப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, வீட்டை சோதனை செய்தபோது, அறையொன்றில் பயணிப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​மஹர பகுதியைச் சேர்ந்த மோரின் என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக்காவல் உத்தரவை பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.