உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 168 முறைப்பாடுகள் பதிவு !


எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக இதுவரை குற்றவியல் முறைப்பாடு மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 168 முறைப்பாடுகள் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

36 குற்றவியல் முறைப்பாடுகளும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 132 முறைப்பாடும் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மார்ச் 3 ஆம் திகதி முதல் உள்ளாட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முறைப்பாட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 14 வாகனங்களையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.